என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை மிரட்டல்
    X
    தற்கொலை மிரட்டல்

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதிப்பதாக நோயாளி தற்கொலை மிரட்டல்

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மாடியில் இருந்து நோயாளி குதிப்பதாக தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் ஊழியர்கள் செய்வது அறியாமல் திணறினர்.
    செங்கல்பட்டு:

    கூடுவாஞ்சேரியில் உள்ள நடைபாதையில் தங்கி தனியாக வசித்து வருபவர் சந்துரு என்கிற சந்திரபாபு (வயது30). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆம்புலன்சு டிரைவர் சந்துருவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.

    அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பின்னர் அவரை சாதராண வார்டுக்கு டாக்டர்கள் மாற்றினர். அப்போது அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் திடீரென சந்துரு ரகளையில் ஈடுபட்டார். அனுமதி இல்லாமல் எனக்கு எப்படி சிகிச்சை அளித்தீர்கள் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

    மேலும் அவர் முதல் மாடியில் இருந்து திடீரென ஓட்டம் பிடித்து 3 -வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் செய்வது அறியாமல் திணறினர். சந்துருவிடம் நைசாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் திடீரென மாடியில் இருந்து அங்கிருந்த சிலாப்பில் தவறி விழுந்தார். நீண்ட நேரம் அவர் ஆஸ்பத்திரி ஊழியர்களை திணறடித்தார்.

    பின்னர் செங்கல்பட்டு டவுன் போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சந்துருவை பத்திரமாக மீட்டனர். விசாரணையில் அவர் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறார். அவருக்கு மன நோயாளி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×