search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீட்கப்பட்ட ஆட்டை படத்தில் காணலாம்.
    X
    மீட்கப்பட்ட ஆட்டை படத்தில் காணலாம்.

    கோவிலுக்கு நேர்த்திக்கடன் விட்ட ஆட்டை திருடிய வாலிபர் சிக்கினார்

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே கோவிலுக்கு நேர்த்திக்கடனாக நேர்ந்து விட்ட ஆட்டை திஐடிய வாலிரபர் போலீசாரிடம் சிக்கினார்.
    பாப்பிரெட்டிப்பட்டி,
     
    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடி அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. விவசாயியான இவரது மனைவி சாந்தி.

    இந்த தம்பதிகள் தங்களது வேண்டுதல் கடன் தீர்க்க கோவிலுக்கு நேர்த்திக்கடனாக ஆடு வளர்த்து வந்தனர். இந்த ஆட்டை மேய்த்து விட்டு வீட்டின் முன் பகுதியில் நேற்று முன்தினம் கட்டிவிட்டு இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    நள்ளிரவில் கண்விழித்து வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்த போது கட்டாந்தரையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து கணவன்&மனைவி இருவரும் நள்ளிரவு முதலே அக்கம் பக்கம், மேய்ச்சல் நிலம், வயல்வெளி போன்ற பகுதிகளுக்கு சென்று காணாமல் போன கோவிலுக்கு விட்டு ஆட்டை தேடி அலைந்தனர். எங்கு தேடியும் ஆடு பிடிபடவில்லை. இதனால் மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. 

    இது குறித்து  ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து  அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா மற்றும் ஆடு திருடும் கும்பல் இடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

    இந்த விசாரணையில் அப்பகுதியில் உள்ள பட்டவர்த்தி அடுத்த ஜம்மணப்பட்டி சேர்ந்த தங்கராஜ் மகன் சக்திவேல் (வயது22) என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். 

    இதையடுத்து போலீசார் ஆடு திருடன் சக்திவேல் வீட்டுக்குச் சென்று பதுக்கி வைத்திருந்த கோவிலுக்கு நேர்த்திக் கடனாக ஆட்டை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 

    பின்பு ஆட்டின் உரிமையாளர்  சின்னத்தம்பி&சாந்தி தம்பதியினரிடம் ஆட்டை ஒப்படைத்தனர். காணாமல் போன ஆடு  கிடைத்ததையடுத்து தம்பதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டு காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×