என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலாத்காரம்
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்
சிவகாசியில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் ராம்ஆதி. இவர் திருத்தணியில் பலகார கடையில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஊருக்கு வரும்போதெல்லாம் 15 வயதுடைய உறவுக்கார சிறுமியிடம பழகி உள்ளார். அப்போது காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி சம்பவத்தன்று ராம்ஆதியுடன் வீட்டைவிட்டு வெளியேறினார்.
பின்னர் ராம்ஆதி அருகில் உள்ள கோவிலில் சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. பின்னர் திருத்தணிக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு ராம்ஆதிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது சிறுமிக்கு தெரியவந்தது.
இருப்பினும் ராம்ஆதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரின் நடவடிக்கை பிடிக்காததால் சிறுமி ஊர் திரும்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராம்ஆதி சிறுமி குறித்து இணையத்தில் அவதூறான கருத்துக்களை பரப்பி வந்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் புகார் செய்தார். அவர்கள் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் போக்சோ, குழந்தை திருமணம் ஆகிய பிரிவுகளின் கீழ் ராம்ஆதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story






