search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் கல்குவாரி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ககூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தத
    X
    ராணிப்பேட்டையில் கல்குவாரி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ககூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தத

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்குவாரிகள் மாலை 6 மணிக்கு மேல் இயங்க தடை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்குவாரிகள் மாலை 6 மணிக்கு மேல் இயங்க கூடாது என கலெக்கடர் உத்தரவிட்டுள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரி மற்றும் ஜல்லிக் கற்கள் உடைக்கும் குவாரிகள் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பது குறித்து குவாரி உரிமையாளர் களுடனான ஆய்வுக் கூட்டம்  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:&

    கல் குவாரிகள் மாலை 6 மணிக்கு மேல் இயங்கக்கூடாது, வெடி வைப்பதும் கூடாது. ஜல்லிக் கற்கள் உடைக்கும் குவாரிகள் இயங்கலாம். குவாரிக ளிலிருந்து ஜல்லி உடைக்கும் குவாரிக்கு லாரிகள் மூலம் கற்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஏற்றி செல்லப்படுகிறது.

    இதனால் சாலை பழுது ஆகின்றது. மேலும் வேகமாக செல்வதால் சாலைகளில் இருந்து வழியில் செல்பவர்களுக்கும் விபத்து ஏற்படுகிறது.

    எம்சாண்ட் ஜல்லி கற்கள் தயாரிக்கும் குவாரிகள் அதிகளவு பாரங்களை ஏற்றிச் செல்வதாகவும் புகார் வருகின்றது.

    மேலும் பாதுகாப்பின்றி லோடு ஏற்றிச் செல்லும்போது, தார்பாலின் மூடி எடுத்துச் செல்லப்படுவது இல்லை. இதனால் காற்றில் பறந்து வாகனங்களில் செல்பவர்கள் மீதும் நடந்து செல்வோர் மீதும் துகள்கள் விழுந்து விபத்து ஏற்படுகின்றது என கிராம மக்கள் அதிகளவில் புகார்கள் தெரிவிக்கின்றனர். 

    இதற்கு கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டும். லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட அதிக கற்கள் ஏற்றக்கூடாது. ஜல்லி கற்கள் எடுத்துச் செல்லும் பொழுது தார்பாலின் மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். லாரிகள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். இதனை குவாரி உரிமையாளர்கள் கட்டாயம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

    அரசு தெரிவிக்கும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனை உதாசீனப்படுத்தக் கூடாது. பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. இந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கட்டாயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவர் அவர் பேசினார்.

    இந்தக் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, உதவி இயக்குநர் கனிமவளம் பெர்நாட், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், அனைத்து வட்டாட்சியர்கள். கல் குவாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×