என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிரான்ஸ்பார்மரை ஒன்றிய சேர்மன் வடிவேலு தொடங்கி வைத்த காட்சி
நெமிலி அருகே டிரான்ஸ்பார்மரை ஒன்றிய சேர்மன் வடிவேலு தொடங்கி வைத்தார்
நெமிலி அருகே டிரான்ஸ்பார்மரை ஒன்றிய சேர்மன் வடிவேலு தொடங்கி வைத்தார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம், இலுப்பைத் தண்டலம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைத்தல் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் குளம் தூர்வாருதல் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அனுசுயா மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம், சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர்பவானி வடிவேலு, தனசேகரன், முஹம்மது அப்துல் ரஹ்மான், அரிகிருஷ்ணன், கோகுல்நாத், ஆனந்தன், மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






