என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநங்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.
அரியலூரில் சர்வதேச திருநங்கைகள் தினவிழா
அரியலூரில் சர்வதேச திருநங்கைகள் தினவிழா நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சர்வ தேச திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு, திருநங்கைகளு டனான ஆலோசனைக்கூட் டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதார நிலை குறித்தும், அவர்களது இருப்பிடவசதிகள், சிறு தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலெக்டர் கலந்துரையாடினார்.
மேலும், சமூக நலத்துறை சார்பாக இரண்டு திருநங் கைகளுக்கு சுய தொழில் செய்ய மானியம் ரூ.50,000 வீதம் ரூ.1,00,000 தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வா தார இயக்கத்தின் மூலம் நலிவுற்றோர் தனிநபர் கடனாக இரண்டு திருநங்கைகளுக்கு ரூ.10,000 வீதம் ரூ.20,000 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திருநங்கைகளுக்கு சிறப்பு சுய உதவிக்குழுக்கள் அமைப்பது பற்றியும் குழுக்களின் மூலம் வங்கி கடன் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம் படுத்திக்கொள்வது பற்றியும் விளக்கினார்.
சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் திருநங்கை களுக்கான சிறப்பு ஒய்வூதி யத்திட்டம் பற்றி எடுத்துரைத் தார். மாவட்ட சமூகநல அலுவலர் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளுக்கு வழங்கப்படும் சுய தொழில் தொடங்குவதற்கான மானியம் பற்றி விளக்கினார்.
மேலும், திருநங்கைகள் சார்பில் அளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், திருநங்கைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்தார்.
Next Story






