என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
448 ஆயுதப்படை போலீசார் பணியிட மாற்றம்- வேலூர் டி.ஐ.ஜி. உத்தரவு
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 448 ஆயுதப்படை போலீசார் பணியிட மாற்றம் செய்து வேலூர் டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங் களாக பிரிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆயுதப்படை போலீசார் வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்றி வந்தனர். இதனால் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா அந்தந்த மாவட்டத்திற்கு தேவையான போலீசாரை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 224 போலீசாரும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 224 போலீசாரும் மொத்தம் 448 பேர் பணி மாறுதல் செய்து உத்தரவிட்டு அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இனி அந்தந்த மாவட்டங்களில் இருந்து கைதிகளை கோர்ட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வது, பாதுகாப்பு பணிக்கு ஆயுதப்படை போலீசார் அழைத்து கொள்ளலாம்.
இனிமேல் ஆயுதப்படை போலீசார் வேலூருக்கு சென்று மீண்டும் அங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
Next Story






