என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கர் நகராட்சியில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு ஆணையர் பரந்தாமன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட காட்சி.
    X
    சோளிங்கர் நகராட்சியில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு ஆணையர் பரந்தாமன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட காட்சி.

    சோளிங்கர் நகராட்சியில் வரி கட்டாமல் இருந்த 3 கடைகளுக்கு “சீல்”

    சோளிங்கர் நகராட்சியில் வரி கட்டாமல் இருந்த 3 கடைகளுக்கு “சீல்” வைக்கப்படட்டது.
    சோளிங்கர்:

    ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி, சொத்து வரி குடிநீர் கட்டணம், கடைகள், தினசரி மார்க்கெட், பஸ் நிலைய கடைகள் சுங்கம் மற்றும் குத்தகை உள்ளிட்ட வைக்கு கட்டவேண்டிய வாடகை மற்றும் வரி நீண்ட நாள் செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது. 

    இந்நிலையில் சோளிங்கர் பஸ் நிலையம், வாலாஜா ரோடு ஆகிய இடங்களில் நகராட்சி ஆணையர் பரந்தாமன் தலைமையில் இளநிலை உதவியாளர்கள் எபினேசன், வெங்கடேசன், சரண்ராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வாடகை மற்றும் வரி கட்டாமல் உள்ள கடைகளில் வசூலில் ஈடுபட்டனர்.

    அப்போது நகராட்சிக்கு சொந்தமான குறிஞ்சி காம்ப்ளக்சில் 3 கடைகள் நீண்ட நாட்களாக வாடகை மற்றும் வரி பாக்கி இருந்து வந்த நிலையில் இதனை தொடர்ந்து 3 கடைகளுக்கும் நகராட்சி ஆணையர் பரந்தாமன் உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.
    Next Story
    ×