என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  சிப்காட் அருகே பைக் மீது லாரி மோதி பெண் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிப்காட் அருகே பைக் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
  ராணிப்பேட்டை:

  ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் அருகே உள்ள கத்தாரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 65). 

  இவரது மனைவி அம்சா (60). 2 பேரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர். லாலாப்பேட்டைக்கு வேலைக்கு செல்வதற்காக கணவன்-மனைவி இருவரும் பைக்கில் கத்தாரி குப்பம் கிராமத்திலிருந்து சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது நெல்லிக்குப்பம் கிராமம் அருகே வந்தபோது பின்னால் வந்த டேங்கர் லாரி இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

  இதில் அம்சா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பரசுராமனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

  இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு பார்த்தசாரதி சப்-இன்ஸ்பெக்டர் தாசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×