என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
நூறுநாள் வேலை கேட்டு சாலை மறியல்
நூறுநாள் வேலை கேட்டு சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்
அரியலூர்:
அரியலூர் அருகே நூறு நாள் வேலைக் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அபினாபாத் கிராம மக்கள் தங்களுக்கு நூறுநாள் வேலை கேட்டு,
செந்தூறை சாலையில் கற்களைப் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராஜாமூர்த்தி, கோரிக்கை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இம்மறியல் போராட்டத்தால், செந்தூறை சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






