search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து திருட்டு

    காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன்(வயது31). மீனவர். இவர் பெரியகாலாப்பட்டில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் அடகு வைத்த நகையை மீட்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து ரூ-.1லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப்பணமும், அரை பவுன் மோதிரமும் கொண்டு சென்றார். 

    மோட்டார் சைக்கிளை வங்கி முன்பு நிறுத்தி விட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 60ஆயிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணம் ரூ-.3 ஆயிரம் மற்றும் மோதிரத்தை வைத்துவிட்டு வங்கி சென்றார்.

    பின்னர் நகையை மீட்டுக் கொண்டு அய்யனாரப்பன் வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அதில் வைத்திருந்த ரூ-.3ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் அரை பவுன் மோதிரம் திருடப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அய்யனாரப்பன் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் பதிவு எண் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வங்கி எதிரே நின்று வங்கிக்கு செல்வோரை கண்காணிப்பதும், பின்னர் அதில் ஒருவன் அய்யனாரப்பனின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்து நகை-பணத்தை திருடிக்கொண்டு தயாராக நின்றுக்கொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×