என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிகாரிகளிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்த காட்சி.
நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து படையெடுத்து வரும் வண்டுகளால் பொதுமக்கள் அச்சம்
நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து படையெடுத்து வரும் வண்டுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா அலுவல கம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக குடோன் உள்ளது. இங்கு செந்துறை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி மற்றும் உணவுப்பொ ருட்கள் சேமித்து வைக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடோனில் அளவுக் கதிகமாக அரிசிகள் சேமிப்பு செய்து வைத்து உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த குடோனில் அதிகளவில் அரிசி வண்டுகள் உற்பத்தியாகி இரவு நேரங்களில் வெளியே வந்து அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வருகிறது.
இது குறித்து பல்வேறு முறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த நிலையில் டி.ஆர்.ஓ. ஜெயினுலாபுதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் செந்துறை தாசில்தார் குமரய்யா ஆகி யோர் குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையை முடித்து விட்டு காரில் ஏறி அங்கு இருந்து சென்றபோது போது, அங்கு வந்த செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் காரை நிறுத்தி டி.ஆர்.ஓ.விடம் அரிசி குடோனில் இருந்து நாள் தோறும் வண்டுகள் பறந்து வந்து குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அருகே உள்ள தனது வீட்டிலும் வண்டுகள் தொல்லையால் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம் என்று டி.ஆர்.ஓ.விடம் சரமாரியாக புகார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து டி.ஆர்.ஓ. காரில் இருந்து இறங்கி வந்து எங்கெல்லாம் வண்டு தொல்லைகள் உள்ளது என்று பார்வையிட்டதோடு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து முறையாக வண்டுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றார்.

Next Story