என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர், மனு தாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறை போலீசார் சரகம் இலுப்பையூர் கிராமத்தைச் சார்ந்தவர் பிரகாசம். செந்துறை ஒன்றிய தி.மு.க. பிரதிநிதியான இவர், கடந்த 13.7.2020 அன்று இடப்பிரச்சனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு செல்வராஜ்
மற்றும் 5 பேர் மீது பிரகாசத்தை தாக்கியதாகவும், பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
செந்துறை போலீஸ், மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி. வரை புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக் கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பிரகாசம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அரியலூர் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளார், மனுவை விசாரித்த மனித உரிமை நீதிபதி ஜெயச்சந்திரன் பிரகாசத்தின் புகாரின் பேரில் முறையான நடவடிக்கை எடுக்காத செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,
நான்கு வார காலத்திற்குள் ரூ.25 ஆயிரம் இழப்பீட்டு தொகையாக பிரகாசத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார், தற்போது ராஜ்குமார் கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story