என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கியபோது எடுத்தபடம்.
    X
    போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கியபோது எடுத்தபடம்.

    செல்போனில் நேரத்தை செலவிடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.

    செல்போனில் நேரத்தை செலவிடுவதால் சமூக விரோத செயல்களுக்கு தூண்டுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூரில்,  அரசு தொழிற் பயிற்சி   நிலைய மாணவர்கள்  சார்பில் கடந்த ஒரு வாரமாக நடை பெற்று வந்த நாட்டு நலப் பணித்திட்ட சிறப்புமுகாம் நிறைவு நாளில்  கலந்து கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா, மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசியதாவது:-

    மாணவர்கள்  பொழுது போக்கு நேரத்தை வீணாக்காமல் சமுதாய பணிகள் செய்வதில் ஈடுபட்டால் தேவை யில்லாத வீண் பிரச்சினைக ளில் சிக்காமல் நல் வழியில் செல்வதற்கு வழி வகுக்கும்.

    இன்னும் சில மாணவர்கள் தங்கள் படிக்கும் நேரம்போக மீதி நேரத்தில் கைப்பேசியில் இணையதளம் மூலம் கழிக் கின்றனர். அதனால் அவர்க ளுக்கு எந்த பயனும் ஏற்படுவ தில்லை. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபட மாணவர்களை தூண்டுகிறது.

    இதனால் அவர்கள் வாழ்க்கை  சீர்கேடாகிறது. இளம் வயதில் படித்து முன்னேறாமல் தவறான எண்ணங்கள் தோன்றி திசை மாறி செல்கின்றனர். எனவே மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு அறிவு செல்வத்தை தேடி செல்ல வேண்டும்.

    இளம் பருவத்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். நாட் டுக்கும், மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்பு களை கண்டறிவதில் ஆர்வம் காட்ட மாணவர்கள் முயல வேண்டும். நாட்டுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்கள் எண்ணி செயலாற்றவேண்டும்.

    ஏனென்றால் மாணவர்களை நம்பித்தான் வருங்காலம் இருக்கிறது. இதனை ஒருபோதும் மறக்கலாகாது. நாட்டுக்கு  நாம்  செய்யும் தொண்டு,  நமக்கு  நாமே செய்து கொள்ளும் தொண்டாகும்.  

    ஏனென்றால்  நாம் இல்லாமல்  நாடு  இல்லை. சிறுதுளி  பெரு  வெள்ளம் போல், நாம் ஒவ்வொருவரும் செய்யும் சிறு தொண்டு பெருந்தொண்டாய் நாட்டை வளப்படுத்தும் என்று நினைவில் கொண்டு செயல் படுவோம்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கி னார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×