என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்ட காட்சி.
குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றியம், விளாங்குடி ஊராட்சியில் மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, விளாங்குடி ஊராட்சி, கீழவிளாங்குடி வடக்குத் தெருவில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.1.67 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டு வரும் புதிதாக பைப் லைன் அமைத்தல் பணியையும், விளாங்குடி மயானத்திற்கு 15 -வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.1.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மோட்டார்
மற்றும் தடைமட்டத் தொட்டி, 14 -வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய போர்வெல், மின்மோட்டார் அறை மற்றும் பைப்லைன் அமைத்தல் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், பைப்லைன் மற்றும் மின்மோட்டார் அமைத்தல் போன்ற குடிநீர் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யவும், கருவேலி முட்புதர்கள் அகற்றும் பணிகளை முறையாக மேற்கொண்டு நீர்நிலைகளை பாதுகாக்கவும்,
மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிப்பதுடன், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டி முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

Next Story