என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்

    தொழிற்சங்கத்தினர் 2 ம் நாளாக ஆர்ப்பாட்டத்தில்

    அரியலூரில் தொழிற்சங்கத்தினர் 2ம் நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    அரியலூர்:


    மத்திய அரசைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து தொழிற்சங்கத்தினர்2&ம் நாளாக நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தொழிலாளர் சட்டவிரோத தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு மாவட்டச் செயலர் துரைசாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலர் டி.தண்டபாணி, எல்.பி.எப்.  மாவட்ட கவுன்சில் தலைவர் மகேந்திரன், ஐ.என்.டி.யு.சி மாவட்டத் தலைவர் விஜயகுமார், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலர் ராமசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    சி.ஐ.டி.யு மாவட்ட துணைச் செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், அங்கன் வாடி பணியாளர்கள், மின்சாரத்துறை ஊழியர் சங்கத்தினர், எல்.ஐ.சி சங்க முகவர்கள், கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
    Next Story
    ×