என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேரு வீதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள காட்சி.
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் வெற்றி
அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதுவையில் 2-ம் வேலை நிறுத்த போராட்டத்தை முழு அடைப்பு போராட்டமாக நடத்த அழைப்பு விடுத் திருந்தோம்.
புதுவையில் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல்கட்சிகள், வியாபார, வர்த்தக நிறுவனங்கள், பஸ், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கங்களுக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






