என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலீசாருக்கு இணையாக ஜெயிலர்களுக்கு சம்பளம்

    சிறைதுறை விதிகளில் மாற்றம் செய்து போலீசாருக்கு இணையாக சம்பளம் வழங்கப்படும்.
    புதுச்சேரி:

    புதுவை சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங்சாகர் நிருபர்களிடம் கூறியதாவது:--

    புதுவை சிறை விதிகள் 1969-ல் உருவாக்கப்பட்டது. 53ஆண்டுகளுக்கு பிறகு இந்த விதிகளை திருத்தி அமைத்துள்ளோம். இதன்படி 14ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

    தற்போது 10ஆண்டு முடிந்த நன்னடத்தை கைதிகள் விடுவிக்கப் படுவர். போக்சோ போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். 

    அரை நூற்றாண்டு காலமாக சிறை அதிகாரிகள், காவலர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே சம்பளம், பதவி உயர்வு வேறுபாடு இருந்தது. தற்போது போலீசாருக்கு இணையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    பணி நேரம் 8 மணி நேரமாக மாற்றப்பட்டு 3 ஷிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு புதுவையில் காலையில் கோதுமை தோசையும், காரைக்காலில் கஞ்சியும் வழங்கப்பட்டு வந்தது. 

    இதை மாற்றி காலையில் இட்லி, உப்புமா, பொங்கல் வழங்கப்படும். 6 மாத தண்டனைக்கு பின் வெளிநாட்டு கைதிகள் அவர்கள் நாட்டு சிறைக்கு மாற்றப்படுவர். கைதிகள் கால்நடை வளர்ப்பு, விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். 

    இவ்வாறு அவர் கூறினார்
    Next Story
    ×