என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
தனியார் நிறுவன குடோனில் ரூ.17.75 லட்சம் கொள்ளை
தனியார் நிறுவன குடோனில் ரூ.17.75 லட்சம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பில் மளிகைப் பொருட்களை இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவன பணியாளர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் எடுக்கும் ஆர்டர்களை இந்த குடோனில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு மளிகைப் பொருள்கள் ஆட்டோக்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும் ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருட்களையும் இங்கிருந்து விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரவு வழக்கம்போல் குடோனை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். காலை வந்து பார்த்தபோது குடோனில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.17.75 லட்சம் பணம் மற்றும் இரண்டு லேப்டாப் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து குடோன் மேலாளர் ஷேக்பரக்கத் (வயது29)பாடாலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story