என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மக்கள் நலனுக்காக தி.மு.க. செயல்படுகிறது-கென்னடி எம்.எல்.ஏ. அறிக்கை

    மக்கள் நலனுக்காக தி.மு.க. தொடர்ந்து செயல்படுகிறது என்று கென்னடி எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநில மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச் சினைகளை தி.மு.க. கவனம் செலுத்தாமல் சபாநாயகர் மீது தனிப்பட்ட வெறுப்பு அரசியலை நடத்துவதாக அதி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் கூறி உள்ளார். 

    இது, முட்டுக்கட்டு அறிக்கை. எப்படியாவது யாருக்காவது சாதகமாக பேட்டிகளும், அறிக்கைகளும் கொடுத்து பதவி பெற்று விட வேண்டும் என்பதற்காக அறிக்கை. 

    தி.மு.க. எதிர்க்கட்சி பணியை செய்யவில்லை என்று கூறி அவரது கட்சி பணியை செய்யாமல் கூட்டணி கட்சியினருக்கு ஜால்ரா அடிக்கும் பணியை செய்து வருகிறார். 

    ஆனால், தி.மு.க.வோ மின்துறை தனியார் மயமாக்கல்,  அரசு பணியிடங்கள் நிரப்பாதது, மாணவர்களை பாதிக்க செய்யும் நீட் தேர்வு, கியூட் தேர்வு, கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி உள்ளிட்ட அனைத்து மாநில பிரச்சினைகளிலும் குரல் கொடுத்து வருகிறோம். 

    தி.மு.க. தொடர்ந்து மக்கள் நலனுக்காக, எதிர்க் கட்சியைப்போல் செயல்பட்டு வருவதால்தான் இந்த அரசு முற்றிலும் மதவாத அரசைபோலவும், ஜனநாய கத்துக்கு விரோதமாகவும் செயல்படாமல் உள்ளது.

    எங்களது நோக்கமே  சபாநாயகர், சபாநாயகரைப் போல் செயல்பட வேண்டும் என்பது தான்.

    எனவே, தேவையின்றி அறிக்கை விட்டு குறுக்கு வழியில் பதவியை அடைய நினைக்கும் முயற்சியை கைவிட்டு மக்களுக்காகவும், மாநிலத்துக்காகவும் உண்மையாக செயல்பட வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×