என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொசு மருந்து அடிக்கும் பணியை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
கொசு மருந்து தெளிக்கும் பணி
பா.ஜனதா சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணியை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி பாரதிதாசன் நகர் வார்டு காமராஜர் வீதி இந்திரா நகரில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் உமாபிரபு ஏற்பாட்டில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.
நிகழ்ச்சியை அசோக் பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வர்த்தகர் அணி தலைவர் சத்தியராஜ், கூட்டுறவு பிரிவு வெற்றிச்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், மீனவரணி துணைத்தலைவர் நடராஜன், அமைப்பு சாரா அணி சரவணன், தொகுதி துணைத்தலைவர் விஜயகுமார், செயலாளர் கனகராஜ், பாபு, மாவட்ட துணைத்தலைவர் விஜய ரங்கம், கார்த்திகேயன், ராஜி, ஆனந்தன், சுதாகர், கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






