search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்ன ஆராய்ச்சிகுப்பத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.
    X
    சின்ன ஆராய்ச்சிகுப்பத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா, செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.

    பாகூர் தொகுதியில் பழங்குடியினருக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை

    பாகூர் தொகுதியில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வீடு கட்டித்தர அமைச்சர் சந்திரபிரியங்கா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக்குட்பட்ட இருளஞ்சந்தை கிராமத்தில் புறாந்தொட்டி கரை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    இவர்கள் நிரந்திர குடியிருப்புகள் இல்லாததால், வாய்க்கால் கரை பகுதி, சாலையோரங்களில் குடிசைகள் அமைத்து வசிக்கின்றனர். 

    இவர்கள், தங்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து பேசினார். 

    இந்த நிலையில், அமைச்சர் சந்திரபிரியங்கா செந்தில்குமார் எம்.எல்.ஏ.வுடன் இருளஞ்சந்தை கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று மாற்று இடத்தில் நிரந்திர குடியிருப்புகளை கட்டித்தருவது தொடர்பாக ஆய்வு செய்தார்.  

    இதனைத்தொடர்ந்து, ஆராய்ச்சிக்குப்பம், பரிக்கல்பட்டு கிராமத்தில் நீண்ட நாட்களாக தனியார் மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை, கையகப்படுத்தி பட்டா மற்றும் வீடு கட்டித்தர  வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில், அந்த இடத்தையும் பார்வையிட்டு அமைச்சர் சந்திரபிரியங்கா ஆய்வு செய்தார்.  

    அப்போது, மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

    ஆய்வின் போது, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்தி கேயன், மேலாளர் ரவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நல ஆய்வாளர் மோகனா, ஏழுமலை, வருவாய் ஆய்வாளர் பரந்தாமன், ஆராய்ச்சிக்குப்பம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவி, முருகன், கந்தன், சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். 

    இந்த ஆய்வின் போது பிரசித்தி பெற்ற பாகூர் மூலநாதர் வேதாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஆலய அர்ச்சகர் கொங்கு சனிபகவான் சிறப்பு குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.
    Next Story
    ×