என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை வருமான வரித்துறை ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடந்த காட்சி.
    X
    புதுவை வருமான வரித்துறை ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    வருமான வரித்துறையினர் ஆர்ப்பாட்டம்

    அகில இந்திய வேலை நிறுத்தத்தில் வருமான வரித்துறை ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.
    புதுச்சேரி:

    மத்திய தொழிற் சங்கங்களுக்கு ஆதரவாக புதுவை வருமான வரித்துறை ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    புதுவை ஊழியர்கள் சங்க தலைவி உமா மகேஷ்வரி தலைமை வகித்தார். செயலாளர் அனிருத்சர்மா முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் கோவிந்தன் விளக்கவுரையாற்றினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பொருளாளர் சிற்றரசன் நன்றி கூறினார்.

    இதேபோல எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக புதுவை சாரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    சங்க தலைவர் மனோகர் தலைமை வகித்தார். கோட்ட தலைவர் நாகராஜன், புதுவை கிளை செயலாளர் ஜவகர் கண்டன உரையாற்றினர். பொருளாளர் ஆனந்தி நன்றி கூறினார்.  இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். 
    Next Story
    ×