என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்ற போது எடுத்த படம்
    X
    பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்ற போது எடுத்த படம்

    மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள்

    பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடை பெற்றது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சிலம்பச்சங்கம், தமிழ்நாடு சங்கம் மற்றும் ராசராச சோழன் சிலம்பக்கூடம் சார்பில், மாவட்ட அளவில் 3ம் ஆண்டு சிலம்பப் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் ஷர்புத்தீன், ராசராச சோழன் சிலம்பக் கூடத்தின் தலைவர் தினேஷ்குமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.

    10 முதல் 14வயது வரையிலான சப்&ஜூனியர்களுக்கும், 14 முதல் 17 வயது வரையிலான ஜூனியர்களுக்கும், 17 முதல் 25 வயது வரையிலான சீனியர்களுக்கும் தனித்தனியாகப் போட்டிகள் நடைபெற்றன.

    இதில், தொடுமுறை, தனித்திறன் போட்டிகள், குழுப் போட்டிகள் நடை பெற்றது.  இப்போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியில்  முதலிடம் பெற்றவர்கள்  மாநில அளவிலான  போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×