search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கொட்டி மூடி வைத்துள்ள காட்சி.
    X
    நெல்லை கொட்டி மூடி வைத்துள்ள காட்சி.

    கலெக்டர் அறிவித்தும் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்

    கலெக்டர் அறிவித்தும் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் அறிவித்தும் இன்னமும் திறக்கப்படாத அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் அதிக இடங்களில் நேரடி கொள்முதல் நிலையமும், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில், நெல் விளைச்சலுக்குத் தகுந்தாற்போல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

    திருமானூர் அடுத்த சுள்ளங்குடியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 25ந் தேதி அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று கலெக்டர் பெ. ரமணசரஸ்வதி அறிவித்தும் இன்னும் அங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமலே உள்ளது.

    சுள்ளங்குடி பகுதியில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் 26 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், விவசாயிகள், கொள்முதல் நிலையத்தில் தங்கள் நெல்லைக் கொட்டி மூடி வைத்துள்ளனர். அவை சுமார் 10 ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

    எனவே, அரசின் நெல் கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுள்ளங்குடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×