என் மலர்
உள்ளூர் செய்திகள்

பென்காக் சிலாட் போட்டி நடைபெற்ற காட்சி.
மாநில அளவிலான பென்காக் சிலாட் போட்டி
ரெட்டியார்பாளையம் சமுதாயநல கூடத்தில் மாநில அளவிலான பென்காக் சிலாட் போட்டி நடந்தது-
புதுச்சேரி:
புதுவை மாநில அமெச்சூர் பென்காக் சிலாட் தற்காப்பு கலை சங்கம் மற்றும் என்.ஆர். விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான பென்காக் சிலாட் போட்டி ரெட்டியார் பாளையம் சமுதாய நல கூடத்தில் நடந்தது.
போட்டியை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், வருவாய் அதிகாரி அய்யனார் ஆகி யோர் முன்னிலையில் புதுவை ஒலிம்பிக் சங்க துணை செயலாளர் கராத்தே வளவன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் செந்தமிழ்செல்வன், இளையராஜா, அஞ்சு மற்றும் சங்க நிர்வாகிகள் பச்சையப்பன், அருள்ஜோதி, ஆறுமுகம், மகேஷ், தணிகா சலம், தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார்.
Next Story






