என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சாலை விபத்தில் என்ஜினீயர் பலி

    பெரம்பலூரில் நடந்த சாலை விபத்தில் என்ஜினீயர் பலியானார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்   அருகே கல்பாடி   வடக்கு தெருவை சேர்ந்தவர்   மணிகண்டன் வயது23 .பி.இ.சிவில் என்ஜினீயரான இவர் கன்ஸ்ட்ரக்சன் வைத்து தொழில் செய்து வந்தார்.

    இவர் சம்பவதன்று  தனது  மோட்டார் சைக்கிளில் திருச்சி & சென்னை சாலை, கல்பாடிபிரிவு  சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது  மோட்டார் சைக்கிள்  முன்பு சென்ற ஆட்டோ திடிரென  நின்றதால் பின்னால் வந்த  மோட் டார் சைக்கிள்  எதிர்பாரத விதமாக ஆட்டோ மீது மோதியது.

    இதில்   படுகாயமடைந்த மணிகண்டன்  சிகிச்சைக்காக பெரம்பலூர்  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து  மணிகண்டனின் தந்தை ராஜா பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார்  வழக்குபதிவு செய்து விபத்தை  ஏற்படுத்திய  ஆட்டோ டிரைவர் விழுப்புரம்  செஞ்சி  தாலுகா,  கள்ளப்புலியூரை  சேர்ந்த பன்னீர் செல்வம்  (42) என்பவரை கைது செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×