என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றபோது எடுத்தபடம்.
அரசு டாஸ்மாக் மதுபார், தியேட்டர் உள்ளிட்ட 25 இடங்கள் அகற்றம்
அரசு டாஸ்மாக் மதுபார், தியேட்டர் உள்ளிட்ட 25 இடங்களை அதிரடியாக அதிகாரிகள் அகற்றினர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் கரை மற்றும் வரத்து வாய்க்கால்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக் கப்பட்டு இருந்தது.
இதனை அகற்ற பொதுப் பணித்துறையினர் பல ஆண்டுகளாக முயன்று வந்தனர். அங்கு வசிப்பவர்களுக்கு பல ஆண்டுகளாக அவகாசம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தர விட்டது. அதனைத்தொடர்ந்து செந்துறை தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி மற்றும் வரத்து வாய்க்கால்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செந்துறை தாசில்தார் குமரய்யா மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்புகள் உறுதியாக அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வாசிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியி ருப்பு மக்கள் தாங்களாகவே ஏறிக்கரை பகுதியில் அமைத் திருந்த கட்டிடங்கள், தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் கொட்டகைகளை இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் பாதுகாப்பு இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற செந்துறை தாசில்தார் குமரய்யா தலைமையில் தாலுகாவில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் படைசூழ அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். தாங்களாகவே ஆக் கிரமிப்புகளை அகற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு அவகாசம் கொடுத்தனர்.
அவகாசம் கொடுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத சினிமா தியேட்டரின் சுற்றுச் சுவர் மற்றும் ஜெனரேட்டர் கட்டிடத்தை அதிரடியாக உடைத்தனர். அதேபோல் அரசியல் பிரமுகர் கலியமூர்த்தி என்பவர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டி இருந்த அரசு மதுபான பாரையும் அதிரடியாக அடித்து உடைத்து அகற்றினர்.
அரியலூர் கலெக்டர் உத்தரவின் பேரில் செந்துறை தாசில்தார் போலீஸ் பாதுகாப்பு இன்றி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் பாரபட்சம் இன்றி 40 ஆண்டு கால நீர்நிலை ஆக்கிரமிப்பு களை அதிரடியாக அகற்றிய சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பையும் வர வேற்பையும் பெற்றது.

Next Story