என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்சார நிறுத்தம்
  X
  மின்சார நிறுத்தம்

  திருக்கோவிலூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கோவிலூர் பகுதியில் மின்தடை காலை வரை சீராகாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

  திருக்கோவிலூர்:

  திருக்கோவிலூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் நகரில் ஏற்பட்ட திடீர் மின்தடை காலை வரை சீராகாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

  இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பொது மக்கள் ஏராளமானோர் புகார் தெரிவித்தும் அதற்கு உரிய பதில் மற்றும் காரணம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருக்கோயிலூர் துணை மின் நிலையம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.

  Next Story
  ×