என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    உளுந்தூர்பேட்டை அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

    உளுந்தூர்பேட்டையில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் மரக்கடை மற்றும் டூ வீலர் ஒர்க் ஷாப் உள்ளது. நேற்று வழக்கம்போல் வேலை முடிந்து இரவில் கடையில் பணிபுரிவார்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கடைக்கு வந்தனர்.

    அப்போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையினுள் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கடை உரிமையாளர் பணியாளர்கள் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் உள்ளே சென்று பார்த்தபோது மரக் கடையில் இருந்து ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் டூ வீலர் ஒர்க் ஷாப் கடையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை நடந்த கடைகளை பார்வை யிட்டு இரவு நேரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களை பார்வையிட்டு கொள்ளையர்களை பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×