என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோத
    X
    தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநில தலைவர் பூ.விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோத

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், செந்துறை,  உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய வட்டங்களை  மையமாக கொண்டு முந்திரி  பழச்சாறு தொழிற்சாலையை அமைக்க வேண்டும்.   

    தா.பழூர் அருகே பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    ஆர்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். முந்திரி தழை மற்றும் காய்களுடன் கலந்துகொண்ட சங்க நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
    Next Story
    ×