என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, மாதிரி குடிநீர் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ள
மாதிரி குடிநீர் பரிசோதனை கூடம் திறப்பு
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி குடிநீர் பரிசோதனை கூடத்தை கலெக்டர் ரமண சரஸ்வதி திறந்துவைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாதிரி குடிநீர் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் 22&ந்தேதி தண்ணீரின் அவசியம் குறித்து உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் தண்ணீரின் தேவையை உணர்ந்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும்.
மழைக்காலங்களில் மழை தண்ணீரை சேமிக்கும் வண்ணம் அவரவர் வீடு மற்றும் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு முறையை கடைபிடித்திட வேண்டும் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
மாதிரி குடிநீர் பரிசோதனைக் கூடத்தில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிநீரின் தரம் மற்றும் கடினத்தன்மை குறித்து செயல்விளக்கம் கலெக்டர் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் விவசாய நிலங்களிலுள்ள நிலத்தடி நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்தனர்.
பொதுமக்களுக்கு தண்ணீரின் தரம் மற்றும் தண்ணீரின் அத்தியாவசியம் பற்றி விளக்கும் கையேடுகள் வழங்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் முருகேசன், உதவி நிர்வாக பொறியாளர் சுந்தரராஜன், உதவிப்பொறியாளர்கள் ராஜேந்திரன் மற்றும் ஆய்வக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






