என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய போது எடுத்த படம்.
புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும்- ரங்கசாமி பேச்சு
வாழ்க்கையை நெறிப்படுத்தும் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி:
புதுவையில் நடந்த தியாகிகள் நினைவு தினத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
தியாகிகள் தினத்துக்கு மாணவர்களை அழைக்க என்ன காரணம்? வழக்கமாக அரசின் விடுதலை நாள், சுதந்திர நாளில் தியாகிகளை கவுரவப்படுத்துவோம். ஆனால் இவ்விழாவில் தியாகிகளின் தியாகத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாணவர்களை அழைத்துள்ளோம்.
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் எத்தனை துன்பத்தை அனுப வித்திருப்பார்கள்? அடிமை வாழ்வு சாதாரணமானதல்ல. அந்த நாட்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும். தலைவர்கள் விடுதலைக்காக போராடினார்கள்.
அதேநேரத்தில் இளைஞர்களும், மாணவர்களும் விடுதலைக்காக போராடினர். மாணவ பருவம் மிக முக்கியமானது. இந்த பருவத்தில் பாட புத்தகங்களோடு வாழ்க்கையை நெறிப் படுத்தும் புத்தகங்களையும் தேடிச்சென்று படிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






