என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி
    X
    கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி

    மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

    மணக்குள விநாயகர் கட்டிடக்கலை பிரிவில் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில், கட்டிடக்கலை பிரிவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இயற்கையிலிருந்து கலை என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் இயக்குனரும் முதல்வருமான சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக மணக்குள விநாயகர் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன் வரவேற்றார்.

    புதுச்சேரி சர்வதேச கைவினை பயிற்றுவிப்பாளர் உமாபதி மாணவர்களுக்கு இயற்கையிலிருந்து கலை என்னும் தலைப்பில் கைவினை பொருட்கள் வடிவமைக்கும் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் துணை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×