என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மதுக்கடையில் மோதல்-தொழிலாளி பலத்த காயம்
புதுவை மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
புதுச்சேரி:
புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஒரு மதுக்கடையில் 33வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மற்றும் 50 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஆகியோர் மது குடித்தனர்.
அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி இருவரும் மாறி மாறி தாக்கிகொண்டனர்.
அப்போது ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் கிடந்த கல்லை எடுத்து தொழிலாளியின் தலையில் சராமாரியாக தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் தொழிலாளி மயங்கி சரிந்தார்.
உடனே மதுக்கடை ஊழியர்கள் இது பற்றி உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாக்குதலில் பலத்த காயமடைந்த தொழிலாளியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனால் அவர் யார்&எந்த ஊர் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி அக்கராம்பாளையத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் (33) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
Next Story






