என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அமலோற்பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் பரிசு வழங்கி பா
    X
    மாணவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., அமலோற்பவம் பள்ளி தாளாளர் லூர்துசாமி ஆகியோர் பரிசு வழங்கி பா

    பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி

    பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவா எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
    புதுச்சேரி:

    அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி ஆண்டு தோறும் பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டியை நடத்தி வருகிறது. 

    அதுபோல் இந்த ஆண்டு வினாடி--வினா போட்டி நடந்தது.  இதில் 12 பள்ளிகளை சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இளநிலை, முதுநிலை என 2 பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டன. 

    பரிசளிப்பு விழாவில் பள்ளி நிறுவனரும், தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். 

    சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்த ஆண்டுக்கான வினாடி-வினா சுழற்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளி பெற்றது.
    Next Story
    ×