என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் திருமண மண்டபத்தில் நாணய கண்காட்சி நடைபெற்ற காட்சி.
புதுச்சேரியில் நாணயவியல் கண்காட்சி
புதுவையில் நாணயவியல் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரி:
தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தின் 17-ம் ஆண்டு விழாவையொட்டி 3 நாள் கண்காட்சி காந்திவீதி சிங்கப்பூர் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
நிறுவனர் கோபிராமன் தலைமை வகித்தார். செயலாளர் சிவாஜி வரவேற்றார். கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கந்தன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அதிகாரியும், தொண்டை மண்டல நாணயவி யல் கழகத்தின் துணைத் தலைவருமான கணேசன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் டாக்டர்கள் முருகேசன், ராச செல்வம், ராமதாஸ், ஆசிரியர்கள் ராமநாதன், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
20-ந் தேதியுடன் நிறைவு பெறும் கண்காட்சியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுக்கு முற்பட்ட சங்ககால, பிற்கால சேர, சோழ, பாண்டியர், சாத வாகனர், பல்லவர் கால நாணயங்கள், விஜயநகர பேரரசு, மதுரை நாயக்க மன்னர்களின் காசுகள், ஆற்காடு நவாபு, ஹைதர் அலி, திப்புசுல்தான், மைசூர் உடையாளர், திருவாங்கூர், புதுக்கோட்டை, மராட்டியர் கால நாணயங்கள், அரிய தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
உலகின் பெரிய பணத் தாள், தமிழ் எழுத்துக்கள் கொண்ட நாணயங்கள், கைவினை பொருட்கள், ஓலைச் சுவடிகள், செப்பேடுகள், சோழர்கால உண்டிகள், போர்வாள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை காலை 10 முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம்.
Next Story






