என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் வெற்றி பெற்றவர்கள் மாநில தலைவர் பாலாஜியை சந்தித்து வாழ்
    X
    கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் ஐ.என்.டி.யூ.சி. சார்பில் வெற்றி பெற்றவர்கள் மாநில தலைவர் பாலாஜியை சந்தித்து வாழ்

    கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் ஐ.என்.டி.யூ.சி. வெற்றி

    கூட்டுறவு கடன் சங்க தேர்தல் ஐ.என்.டி.யூ.சி. வெற்றி பெற்றுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனியாக கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நகராட்சியில் பணிபுரியும் 300 பேர் உறுப்பினராக உள்ளனர். 2 ஆண்டுக்கு ஒருமுறை கடன் சங்க இயக்குனர் குழு தேர்தல் நடத்தப்பட்டு 9 பேர் தேர்வு செய்யப்படுவர். புதிய இயக்குனர்களுக்கான தேர்தல் நடந்தது. 

    இதில் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி தலைமையில் 9 இயக்குனர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். 

    இதில் சகாயராஜ், ஆதிமூலம், இளங்கோவன், சீனுவாசன், முனியன், பெருமாள்,  சீனுவாசன் என 7 பேர் வெற்றி பெற்றனர். 

    வெற்றி பெற்றவர்கள் ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாநில நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞானசேகரன், தமிழ் செல்வன், முத்துராமன், குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×