என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புதுச்சேரி நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம்

    புதுவை நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க நகராட்சி தனியாருக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை நகராட்சி தனது வருவாயை பெருக்க பல்வேறு வரி வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    வீட்டுவரி, காலிமனை வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வணிக உரிமம் ஆகியவற்றுக்கான கட்டணத்தை வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. கூடுதலாக வருவாயை பெருக்க புதிதாக வரி விதிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.

    புதுவை நகர சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இருசக்கரம், 3 சக்கரம், கார், கனரக வாகனம் என வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக் கப்பட உள்ளது. 

    இதற்காக ஒவ்வொரு வீதிகளுக்கும் டெண்டர் ஆரம்ப தொகை நிர்ணயித்துள்ளது. இதற்காக செலுத்தப்பட வேண்டிய முன் வைப்பு தொகையையும் அறிவித்துள்ளது. 31.3.2023 வரை ஓராண்டுக்கு தனியாருக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

    இதற்கான மின்னணு ஏலம் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. புதுவை புதிய பஸ் நிலையத்துக்குள் வர நுழைவு கட்டணம், எந்திரம் மூலம் வாகன எடை பார்க்க கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 

    இதுதவிர முத்தியால் பேட்டை, முதலியார் பேட்டை, நெல்லித்தோப்பு, சாரம், சின்னமணிக்கூண்டு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட் உள் கடைகள், வெளிப்புற கடைகளில் அடிக்காசு வசூலிக்கவும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    நகர பகுதிகளில்  வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகளின் விபரம் வருமாறு:& 

    1.பிராவிடன்ஸ் மால் எதிரில் உள்ள சிங்கார வேலர் திடல்,  2. புதிய பஸ் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், 3. பழைய சிறை வளாக பகுதி, 4.நேரு வீதியில் ராஜா தியேட்டர் முதல் போக்குவரத்து போலீஸ் நிலையம் வரை, 
    5. அண்ணா சிலை சதுக்கம் முதல் ராஜா தியேட்டர் சிக்னல் வரை, ராஜா தியேட்டர் சிக்னல் முதல் அதிதி ஹோட்டல் சிக்னல் வரை
     6. அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மணக்குள விநாயகர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள்,  
    7.பாரதி பூங்கா மற்றும் அரசு பொது மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள்,  8.துய்மா வீதி மற்றும் ரோமன் ரோலண்ட் விதிகள்,  
    9. செயின்ட் லூயி வீதிக்கு கிழக்கில் உள்ள பகுதிகள்,  10.பழைய துறைமுக சாலை டூப்ளே சிலை முதல் பழைய துறைமுக நுழைவு வாயில் வரை, 
    11. தெற்கு புல்வார்ட் சந்திப்பில் உள்ள டூப்லக்ஸ் சிலை முதல் சோளம் பாளையம் சந்திப்பு வரை உள்ள பகுதிகள், 12. எஸ்.வி பட்டேல் சாலை அதிதி ஓட்டல் முதல் பழைய சாராய ஆலை வரை உள்ள பகுதிகள், 
    13. தெற்கு மாட வீதியில் அண்ணா சிலை முதல் சோளம் பாளையம் சந்திப்பு வரை உள்ள பகுதிகள்.
    14. காசிம் வீதி என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் பெரிய வாய்க்கால் மீது அமைந்துள்ள பகுதிகள், 15.மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்காவில் வடக்கு மற்றும் நியூட்டன் தியேட்டர் அருகில் உள்ள பகுதிகள், 16. இந்திரா காந்தி சிலையில் வாசன் கண் மருத்துவமனை வரையிலுள்ள பகுதிகள்,
    17. உள்ளாட்சித்துறை எதிரில் அமைந்துள்ள காலி இடத்தில் உள்ள பகுதி, 18. நூறடி சாலை பாலம் முதல் ஆர்.டி.ஓ. ஆலுவலகம் வரை அமைந்துள்ள காலி இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள், 19.மெரினா பீச் பகுதியில் அமைந்துள்ள பகுதிகள் ஆகும்.

    ஏற்கனவே கடந்த சில ஆண்டுக்கு முன்பு வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க நகராட்சி முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திட்டம் கைவிடப்பட்டது. 

    வீடுகளுக்கு குப்பை வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப் பட்டு வந்தது. புதிய அரசு அமைந்தவுடன் குப்பை வரி ரத்து செய்யப்பட்டது. 

    இந்த நிலையில் நகராட்சி சாலைக்கு, சாலை கட்டணம் வசூலிக்க முடிவெடுத் திருப்பது நகர பகுதியில் வாகனங்கள் பயன் படுத்து வோருக்கு கடும் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.
    Next Story
    ×