என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்த போது எடுத்தபடம்
கஞ்சா விற்பனையை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்-பா.ம.க. கூட்டத்தில் வலியுறுத்தல்
மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை போலீசார் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. செயற்குழு கூட்டம் கவுண்டம் பாளையம் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவை அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை ஒழித்திட போலீசார் இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும்.
நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அதிக அளவில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும். பல்வேறு அரசுத்துறைகளில் ஊழியர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை பொதுப்பணித்துறை மூலம் சீரமைக்க வேண்டும்,
புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து அல்லது சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






