என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஓம்சக்தி சேகர் வழங்கிய காட்சி.
    X
    ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஓம்சக்தி சேகர் வழங்கிய காட்சி.

    நெல்லிதோப்பு தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவோம்-ஓம்சக்தி சேகர் உறுதி

    நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவோம் என ஒம்சக்தி சேகர் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா ஒரு மாத காலம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி நெல்லித் தோப்பு தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா  சாரம் பாலம் அருகில் கொண்டாடப்பட்டது.

    நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமை  தாங்கினார். மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர்  ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி கொடி  ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கி 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இது போல் சக்திநகர் வார்டு  அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா  பிறந்தநாள் விழாவில் கொடி ஏற்றி பொது மக்க ளுக்கு இனிப்பு வழங்கி 200 மகளிருக்கு புடவை மற்றும் நல திட்ட உதவிகளை ஓம்சக்தி சேகர் வழங்கினார்.

    மேலும் குயவர்நகர் வார்டு சார்பில் கருணாகரபிள்ளை தெருவில் நடைபெற்ற ஜெயலலிதா  பிறந்தநாள் விழாவில் ஓம்சக்தி சேகர்  கொடி ஏற்றி இனிப்பு வழங்கி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேற்கு மாநில அ.தி.மு.க.  செயலாளர் ஓம்சக்திசேகர் பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. அதே போல நான் நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசிடம் போராடி பெற்று கொடுத்துள்ளேன்.

    அதேபோல் எனது சொந்த செலவிலும் பல நல திட்ட உதவிகளை செய்துள்ளேன்.

    மீண்டும் நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறும் என்பதை உறுதியாக கூறுகிறேன். அ.தி.மு.க. வெற்றி நடைபோடும்.

    இவ்வாறு ஒம்சக்தி சேகர் பேசினார். 
    Next Story
    ×