என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசு மாடு மீட்பு
சாக்கடைக்குள் விழுந்த பசு மாடு மீட்பு
ஜெயங்கொண்டத்தில் சாக்கடைக்குள் தவறி விழுந்த பசு மாடு மீட்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 8&வது குறுக்கு தெருவில் சாலை ஓரத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு பசுமாடு எதிர்பாராதவிதமாக ரோடு ஓரத்தில் இருந்த சாக்கடைக்குள் விழுந்தது.
மீண்டும் பசு மாடு திரும்பி வெளியில் வர முடியாமல் சூழல் இருந்தது. இது குறித்து பொது மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புதுறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பசு மாட்டினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
Next Story






