என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணி ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய காட்சி.
    X
    பணி ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய காட்சி.

    65 தனியார் நிறுவனங்களுக்கு 292 இளைஞர்கள் தேர்வு- ரங்கசாமி பணி ஆணை வழங்கினார்

    வேலை வாய்ப்பு முகாம்களில் 65 தனியார் நிறுவனங்களுக்கு 292 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பணி ஆணையை ரங்கசாமி வழங்கினார்
    புதுச்சேரி:

    புதுவை அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் மூலகுலம் தனியார் பொறியியல்  கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் 65 தனியார் நிறுவனங்கள் 5 ஆயிரத்து 712 காலி இடங்களை நிரப்புவதற்காக கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 700 மாணவர்கள் கலந்து கொண்டனர்.பல்வேறு தனியார் முன் னணி நிறுவனங்கள் கலந்து கொண்ட  முகாமில்  292 இளைஞர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டர்.

    தேர்வு செய்யப் பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி  தனது இல்லத்தில் வழங்கினார். அமைச்சர் சந்திரபிரியங்கா, தொழிலாளர் துறை துணை ஆணையர் மோகன்குமார், வேலைவாய்ப்பு அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள்  கலந்து கொண்டனர். 
    Next Story
    ×