என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்வாய் சீரமைப்பு பணியில் பா.ஜனதாவினர் ஈடுபட்ட காட்சி.
பா.ஜ.க.வினர் கழிவு நீர் தொட்டிகள் சீரமைப்பு
வம்பா கீரப்பாளையத்தில் கழிவு நீர் தொட்டிகளை பா.ஜ.க.வினர் சீரமைத்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் சட்ட மன்ற தொகுதி வம்பாகீரப்பாளையம் மீனவர் பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் தொட்டிகள் முழுவதும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பெருமளவில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்த அப்பகுதி மக்கள் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மூலமாக தொகுதி பொறுப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான வெற்றிச்செல்வத்திடம் தகவல் தெரிவித்தனர்.
உடனே வெற்றிச் செல்வம், தொகுதி தலைவர் சக்திவேல் மாநில செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், தெய்வநாயகம் ஆகியோரோடு புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு கழிவுநீர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பொதுப்பணித்துறை பொது சுகாதாரத்துறை கழிவுநீர் அதிகாரிகள் அதிநவீன தகுந்த வாகனத்துடன், ஊழியர்களோடு வந்து பார்வையிட்டு அடைப்புகளை சரி செய்தனர்.
Next Story






