என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே ஜிகே உலக பள்ளியில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்த ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜிகே உலக பள்ளியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
அந்த வேலை வாய்ப்பு முகாமில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
சுமார் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
8ம் வகுப்பு முதல் பொறியியல் கலை அறிவியல் பட்ட படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு வரை படித்துள்ள இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு முகாமுக்கு வரும் அனைவருக்கும் தேவையான வசதிகளான தண்ணீர் வசதி ஆம்புலன்ஸ் வசதி தாய்மார்கள் யாரேனும் வந்தால் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
துறைசார்ந்த அலுவலர்களுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லாம், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, இணை இயக்குனர்கள் அனிதா, ராஜசேகர், ஜெகதீசன், ஜிகே உலக பள்ளி இயக்குனர் வினோத் காந்தி, மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






