என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
புதுவையில் பிரபல ஜவுளி கடையில் கொள்ளை
புதுவையில் பிரபல ஜவுளி கடையில் கொள்ளையடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அண்ணாசாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையை வழக்கம் போல இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் முடிந்ததும். கடை உரிமையாளர் கல்லாப்பெட்டியில் ரூ.17 ஆயித்தை மட்டும் வைத்து பூட்டிவிட்டு மீதி பணத்தை வீட்டுக்கு கொண்டு சென்றார்.
மறுநாள் காலை 9,40 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர். அப்போது பணம் வைக்கும் கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர் ஜவுளிக்கடைக்கு விரைந்து வந்தார். கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.17 ஆயிரம் கொள்ளை போயிருந்ததை கண்டார். இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கடையில் பொறுத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரவு 2 மணிக்கு மேல் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. எனவே 2 மணிக்கு மேல் ஜவுளிக்கடையில் கொள்ளை சம்பவம் நடந்து இருக்கலாம் என தெரிகிறது.
கடையின் பூட்டு உடைக்கப்படாமல் இருந்ததால் திருடர்கள் எப்படி வந்திருப்பார்கள் என போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 5-வது மாடியில் கிரில் கேட் திறந்து கிடந்தது. இந்த வழியை பயன்படுத்தி திருடர்கள் பணத்தை கொள்ளை அடித்து சென்றிருக்காலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து அங்கு சேகரிக்கப்பட்ட தடயங்களை வைத்து தொர்டந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






