என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTOS
தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
வடபழனி என்றழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு காலையில் மலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி கம்பத்திற்கு சிறப்பு யாகம் அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களின் அரோகரா, அரோகரா கோஷங்கள் முழங்க மலையில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்தில் ஊராளிக் கவுண்டர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கணேசன், துணை தலைவர் சுப்ரமணியன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மதியழகன் உள்ளிட்ட செட்டிக்குளம், ஆலத்தூர் கேட், இரூர், சத்திரமனை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் முதல் தினந் தோறும் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் இரவு அலங்கார வாகனத்தில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 18-&ந்தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
Next Story






