என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் ஒருவருக்கு மட்டும் கொரோனா
புதுவையில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 479 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதிதாக புதுவையில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப் பட்டது. மாநிலத்தில் யாரும் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெறவில்லை.
புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என 3 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 768 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர். புதுவையில் 11, காரைக்காலில் 12, மாகியில் 4 பேர் என 27 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 27 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.
புதுவையில் 2-வது தவணை உள்பட 16 லட்சத்து 880 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story






