search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி, ரோக.அருள்தாஸ் மற்றும் நிர்வாகிகள் முதல்-அ
    X
    தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி, ரோக.அருள்தாஸ் மற்றும் நிர்வாகிகள் முதல்-அ

    சிறப்பு கூறு நிதியை தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வேண்டும் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

    சிறப்பு கூறு நிதியை தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான மூர்த்தி தலைமையில் செயல் தலைவர் மற்றும் ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் கூட்டமைப்பின் தலை வருமான ரோக. அருள்தாஸ், கன்வீனர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பொறுப்பாளர்கள் திரு மால், கிருஷ்ணமூர்த்தி, பழனிச்சாமி, பொன்னிவேல், ஆதிகேசவன் ஆகியோர் கொண்ட குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சிறப்பு நிதியை பெறும் பல்வேறு துறைகள் சிறப்பு கூறு திட்டங்களை முறையாக திட்டமிடாமல் ஆண்டு இறுதியில் வேறு பணிகளுக்கு நிதியை திருப்பி கணக்கு காட்டுகின்றனர். 

    அத்துடன் திட்டங்களுக்கு நிதி கேட்டு நீதித்துறைக்கு கோப்புகள் சென்றால் பல்வேறு கேள்விகளை முன்வைத்து நிதிச் செயலர் வேண்டுமென்றே தாமதப் படுத்துகிறார். தலித்துகளுக்கான திட்டத்தை முடக்குவது தொடர்கதையாக உள்ளது. ஆகவே இந்த நிதி ஆண்டில் 20 நாட்களே உள்ள நிலையில் மீதமுள்ள 38 சதவீத நிதியை பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆதிதிராவிட மக்களுக்கு அரசு நல்லது செய்ய முயலும்போது அதிகாரிகள் அலட்சியத்தால் முடக்கப் படுகிறது.  இது போன்ற நிதிகள் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் சிறப்புக் கூறு நிதிச் சட்டம் இயற்றப்பட்டு முறையாக செயல்படுத்தப்படுகிறது.

    புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் இதற்கான சட்டத்தை கொண்டுவர இருந்தது, ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியிலாவது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     வருகிற நிதி ஆண்டின் முதல் பட்ஜெட்டில் சிறப்பு கூறு நிதிக்கான திட்டங்களை வரையறுத்து தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×