என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது
வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் போலீசார் இரவு கோடாலிகருப்பூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகில் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த 5 பேரை பார்த்தனர். உடனடியாக அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் கோடாலி கருப்பூர் தோப்பு தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 40) வீரமணி (43) குடவாசல் தெருவைச் சேர்ந்த தங்கராசு (30) அவரது தம்பி முருகன் (25) குவாகம் வெற்றித் தெருவைச் சேர்ந்த அருள்மணி (31) ஆகியோர் என்பதும் ,
அன்று இரவு கோடாலிகருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிடப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கடப்பாறை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story